நத்தத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் கற்பகம் உட்பட 4 பேர் சஸ்பெண்ட் மாவட்ட ஆட்சியர் திருமதி பூங்கொடி உத்தரவு
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கண்ணன் முறைகேடாக ஒதுக்கிய 3.5 கோடி டெண்டரை திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி ரத்து செய்தார்.
முறைகேடாக டெண்டரை ஒதுக்க உடந்தையாக இருந்த வட்டார வளர்ச்சி அலுவலர் கற்பகம் உட்பட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் 3 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள வளர்ச்சி பணிகளுக்கான டெண்டர் மன்ற ஒப்புதல் பெறாமல் நத்தம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கண்ணன் தனிச்சையாக செயல்பட்டு அனுமதி அளித்துள்ளார்.
ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் தலைவரின் செயலுக்கு உடந்தையாக செயல்பட்டு அனுமதி அளித்த வட்டார வளர்ச்சி அலுவலர் கற்பகம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நம்பிதேவி, அலுவலக கணக்காளர் சிவக்குமார், அலுவலக உதவியாளர் கனகலட்சுமி ஆகியோரை தற்காலிக பணியிட நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் திருமதி பூங்கொடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment