வடமதுரை காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட திண்டுக்கல் வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் யுவா(எ)யுவராஜ்(29) என்பவர் கண்ணாடியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார்.
உடனடியாக வடமதுரை காவல்துறையினர் யுவராஜை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வடமதுரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment