திண்டுக்கல் அருகே உடைந்த பீர்பாட்டிலை காட்டி கொலை மிரட்டல் விடுத்து பணம் பறித்த வாலிபர் கைது
திண்டுக்கல்லை சேர்ந்த வினோத் என்பவர் திண்டுக்கல் வத்தலகுண்டுசாலை குட்டியபட்டி பிரிவு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திண்டுக்கல் பொன்மாந்துறை பகுதியை சேர்ந்த முத்துச்சாமி மகன் சண்முகவேல் என்பவர் உடைந்த பீர் பாட்டிலை காட்டி உயிர் பயத்தை ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்து வினோத்திடம் பணம் பறித்ததாக வினோத் அளித்த புகாரின் பேரில் திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட சண்முகவேலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment