திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் உள்ள லிப்டில் மாட்டிக் கொண்ட தாய்.மகள்:
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியை சேர்ந்தவர் பஞ்சவர்ணம். இவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இவருக்கு துணையாக மகள் பழனியம்மாள் இருக்கிறார். இன்று ஸ்கேன் எடுப்பதற்காக 2வது மாடியில் இருந்து லிப்ட் மூலம் இருவரும் கீழே இறங்கினர். அப்போது லிப்ட் பழுதாகி இயங்கவில்லை. இதனால் இருவரும் கூச்சலிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 30 நிமிடம் போராட்டத்திற்கு பிறகு இருவரையும் வெளியே கொண்டு வந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment