வத்தலகுண்டு அருகே தபால் நிலைய போஸ்ட் மாஸ்டர் ரூ. 50 லட்சம் மோசடி செய்ததாக சஸ்பெண்ட்
திண்டுக்கல் வத்தலகுண்டு அருகே உள்ள ஜி.தும்மலப்பட்டி கிளை தபால் நிலைய போஸ்ட் மாஸ்டராக அதே ஊரை சேர்ந்த முனியாண்டி(55), பணியாற்றினார். சிவா என்பவர் கடந்த 14-ம் தேதி தனது கணக்கில் இருந்த ரூ. 2 லட்சத்தை எடுக்க சென்றவருக்கு ஒரு லட்சத்தை கொடுத்து விட்டு பாக்கி பணத்தை பிறகு தருவதாக முனியாண்டி கூறி உள்ளார். சந்தேகமடைந்த சிவா திண்டுக்கல் கோட்ட அலுவலகத்தில் புகார் செய்தார்.
இதனைத் தொடர்ந்து கொடைக்கானல் உப கோட்ட அஞ்சல் ஆய்வாளர் பாண்டியராஜன் ஆவணங்களை ஆய்வு செய்தார். மேட்டூரை சேர்ந்த நான்கு பெண்களின் பாஸ்புக்கை ஆய்வு செய்தபோது அதில் உள்ள பதிவுகள் அனைத்தும் போலி என தெரிந்தது. இவ்வாறு ரூ. 50 லட்சம் வரை மோசடி நடந்திருக்கலாம் என்பதால் முனியாண்டி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment