கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த திண்டுக்கல் கல்லூரி மாணவர்களுக்கு அபராதம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள கரடிச்சோலை பகுதியில் அருவி ஒன்று உள்ளது. இப்பகுதியில் காட்டு மாடுகள் எப்போதும் முகாமிட்டிருக்கும்.
இந்த வனப்பகுதி வனத்துறையினரால் பல ஆண்டுகளாக மூடப்பட்டு நுழைய கூடாது என தடை விதித்தும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று திண்டுக்கல் தனியார் கல்லூரி மாணவர்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலாவிற்கு வந்தவர்கள் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து உள்ளே புகைப்படம் எடுத்தனர்.இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் கரடி சோலை வனப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த கல்லூரி மாணவர்களான நவீன்,செல்வம், வசந்தகுமார், தீபன், பிரேம்குமார், இனியவன், ஆண்டனி உள்ளிட்ட 14 பேருக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.14 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment