ஒட்டன்சத்திரம் அருகே நள்ளிரவில் வீட்டின் உரிமையாளரை அரிவாளால் தாக்கி 5 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்ற முகமூடி கொள்ளையர்கள்
திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் கஸ்தூரி நகரை சேர்ந்தவர் ராமமூர்த்தி(44), இவரது சித்தி மகாலட்சுமி ஆகிய இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் கதவு தட்டும் சத்தம் கேட்டதால் ராமமூர்த்தி கதவை திறந்தார். அப்போது முகமூடி அணிந்த 4 பேர் வீட்டுக்குள் புகுந்து ராமமூர்த்தியின் கையை அரிவாளால் வெட்டிவிட்டு அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, சித்தி மகாலட்சுமி அணிந்திருந்த தோடு உள்ளிட்ட 5 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
பலத்த வெட்டு காயம் அடைந்த ராமமூர்த்தி மருத்துவமனையில் அனுமதி, மேற்படி சம்பவம் குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரணை
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment