திண்டுக்கல்லில் பட்டப் பகலில் வீட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில் சிறுவன் உட்பட 2 பேர் கைது
திண்டுக்கல், எருமைக்கார தெரு பகுதியை சேர்ந்த சிவக்குமார்(44) இவரது வீட்டில் கடந்த 27-ம் தேதி பட்டப்பகலில் மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை, ரூ.9 ஆயிரம் பணம் மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளையடித்து சென்றது தொடர்பாக நகர் தெற்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இது குறித்து S.P. பிரதீப் உத்தரவின் பேரில் ASP.சிபின் மேற்பார்வையில் ஆய்வாளர் ராஜசேகர் தலைமையில் சார்பு ஆய்வாளர் தாவூத்உசேன், நகர் குற்றத்தடுப்பு பிரிவு சிறப்பு ஆய்வாளர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ் காவலர்கள் ராதா, முகமதுஅலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சிசிடிவி காவலர்கள், சைபர் கிரைம் காவலர்கள் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட பெரியகுளத்தை சேர்ந்த காமராஜ்(22) மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து தங்க நகை, வெள்ளி நகைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment