திண்டுக்கல் அருகே காவலரை தாக்கி செயின் பறித்த 2 பேர் கைது
திண்டுக்கல் E.B.காலனி பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்(39) தலைமை காவலர் ஆவார். இவர் சொந்த வேலை காரணமாக நல்லாம்பட்டி கருப்பசாமி கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர்கள் சதீஷ்குமாரை தாக்கி அவரிடமிருந்து 4 பவுன் தங்க செயினை பறித்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன், சார்பு ஆய்வாளர் அருண்நாராயணன் மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட நல்லாம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராகவேந்திரா(25) மற்றும் அரவிந்த்(21) ஆகிய 2 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment