நிலக்கோட்டையில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம்
திண்டுக்கல் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமிக்கு கடந்த மே மாதம் பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் பிச்சைமுத்து(38) என்பவரை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் இன்று போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள், குற்றவாளி பிச்சைமுத்துவிற்கு ஆயுள் தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment