வேடசந்தூரில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த குற்றவாளி பிடியாணை வைத்து கைது செய்த வடமதுரை போலீசார்
திண்டுக்கல் நத்தம் பகுதியை சேர்ந்த சின்னகாளை மகன் சரவணன் என்கிற சரவணன் முத்து (55) இவர் வடமதுரை வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த சரவணன் மேற்படி வழிப்பறி வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த சுமார் 2 வருடங்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் கோர்ட்டு அவருக்கு பிடியாணை பிறப்பித்தது.
இதனையடுத்து வடமதுரை காவல் நிலைய ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான போலீசார் தலைமறைவாக இருந்த சரவணனை கைது செய்து நீதிமன்ற விசாரணைக்கு ஆஜர்படுத்தி பிடியாணையை நிறைவேற்றினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment