ஆடி மாத சூறாவளி காற்று பழனி முருகன் கோவிலில் சில தினங்களாகவே ரோப்கார் சேவையை சீராக இயக்க முடிவதில்லை
ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும் என்பார்கள். அது போல திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பலத்த காற்று வீசி வருகிறது. அதன்படி பழனி பகுதியிலும் சூறாவளி காற்று சுழன்று அடிக்கிறது. இதன் எதிரொலியாக பழனி முருகன் கோவிலில் சில தினங்களாகவே ரோப்கார் சேவையை சீராக இயக்க முடிவதில்லை.
நேற்று காலை 7 மணிக்கு ரோப்கார் சோதனை ஓட்டம் நடைபெற்றது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், காலையில் ரோப்கார் இயக்கப்படவில்லை. மேலும் பகல் முழுவதும் காற்றின் வேகம் குறையவில்லை. இதனால் மாலை 5.30 மணி வரை ரோப்கார் இயக்கப்படவில்லை.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment