தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்புவில் புகழ்பெற்ற சவுந்தரராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பரிவார மூர்த்தியாக எழுந்தருளியுள்ள சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு இன்று தேய்பிறை அஷ்டமியையொட்டி அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்களால் வழங்கப்பட்ட செவ்வரளி பூக்களால் மலர் அபிஷேகம் நடத்தப்பட்டது.
இதையடுத்து சொர்ண ஆகர்ஷண பைரவர் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பொதுவாக பெருமாள் கோவில்களில் பைரவர் இருப்பதில்லை. இங்க சொர்ண ஆகருஷண பைரவராக அமைந்திருப்பது விஷேசமாக கருதப்படுகிறது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment