நத்தம் அருகே பட்டிகுளம் பகுதியில் மது விற்றவர் கைது
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாண்டியன் ஆகியோர் தலைமையிலான போலீசார் பட்டிக்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்த பட்டிகுளத்தை சேர்ந்த அருணாச்சலம் மகன் மாணிக்கம் (வயது 55) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து 25 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மது விற்பனை தொடர்பாக மாணிக்கத்தின் மகன்கள் பிரபு, சதீஷ் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment