திண்டுக்கல்லில் பணம் வைத்து சூதாடியவர்களுக்கு எதிராக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை ஊராட்சி ஒன்றியம் புத்தூர் ஊராட்சி வடமதுரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வி.குருந்தம்பட்டியில் அருள்மிகு முத்தாளம்மன் கோவில் எதிரே உள்ள நாடக மேடையில் தினமும் பகல் நேரங்களில் பூசாரிபட்டி குருந்தம்பட்டி இளைஞர்கள் கூட்டமாக அமர்ந்து பணம் வைத்து சூதாடுகிறார்கள். (சீட்டு விளையாடுகிறார்கள்) ஊர் பெரியவர்கள் பலமுறை எச்சரித்தும் கேட்காமல் பொது இடத்தில் பணம் வைத்து சீட்டுவிளையாடுவதால் அப்பகுதியில் உள்ள சிறுவர் சிறுமியர்கள் பள்ளி மாணவ மாணவியர்கள் இதைப் பார்த்து கெட்டுப்போக வாய்ப்புள்ளது.இந்த சூழ்நிலையில் பணம் கட்டி சீட்டு விளையாடுபவர்களை ஊர் பெரியவர்கள் கண்டிக்க அஞ்சுகிறார்கள். போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை,
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment