திண்டுக்கல்லில் புதிய சாலை கழிவு நீர் ஓடை அமைக்கும் பணியை பார்வையிட்ட மேயர் திரு இளமதி ஜோதி பிரகாஷ் அவர்கள்:
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 23வது வார்டு ஆர்.வி நகரில் உள்ள அருணாசலம் கோவில் எதிரில் உள்ள தெருவில் கழிவு நீர் ஓடை மற்றும் புதிய சாலை அமைக்கும் பணிகளை மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் பார்வையிட்டார். மேலும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கூறினார். உடன் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் இருந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment