புதுவகை ஸ்காலர்ஷிப் மோசடி திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
திண்டுக்கல் மாவட்டத்தில் 10, 11-ம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வந்துள்ளதாக செல்போனில் தொடர்பு கொண்டு உங்கள் வங்கி கணக்கில் ஸ்காலர்ஷிப் பணம் அனுப்ப வேண்டும் என்று கூறி மேலும் உங்களது வங்கி கணக்கில் குறைவாகவே பணம் உள்ளது ஆதலால் நீங்கள் எங்களது வங்கிக் கணக்கில் ரூ.3,000, 4000, 10,000, 12,000 செலுத்துங்கள் உங்களுக்கு உடனடியாக நாங்கள் ஸ்காலர்ஷிப் பணம் ரூ.30,000 அனுப்பி வைப்போம் என்று ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல் பற்றி திண்டுக்கல் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் வந்துள்ளது.
ஆகவே பொதுமக்கள் ஸ்காலர்ஷிப் பணம் வந்துள்ளது என்று உங்களை தொடர்பு கொண்டால் அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது திண்டுக்கல் சைபர் கிரைம் காவல் நிலையம் அல்லது 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க வேண்டும் என்று திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment