பண்ணைக்காடு அருகே நடுரோட்டில் எரிந்தது கார் அதிர்ஷ்டவசமாக 6 பேர் உயிர் தப்பினர்
சிதம்பரம் காட்டுமன்னர் கோவிலை சேர்ந்த ஆரிப்புல்லாவிற்கு சொந்தமான காரில் 6 பேர் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பண்ணைக்காடு ஊத்து பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது காரில் புகை வந்தது. தொடர்ந்து தீப்பற்றி எரிந்தது. காரில் இருந்த இளைஞர்கள் 6 பேரும் உடனடியாக வெளியேறி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொடைக்கானல் தீயணைப்புதுறையினர் தீயை அணைத்தனர். மேற்படி சம்பவம் குறித்து தாண்டிக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர் .
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment