கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலி கொடைரோடு அருகே உள்ள சிறுமலை அடிவார வனப்பகுதிகளில் கள்ளச்சாராயம், கஞ்சா உற்பத்தி செய்யப்படுகின்றதா என காவல்துறையினர்சோதனை
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அவர்கள் உத்தரவின் பேரில் வத்தலக்குண்டு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சஜ்ஜிவ்குமார், சப் இன்ஸ்பெக்டர் சிவராஜ் ஆகியோர் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து சிறுமலை அடிவார வனப்பகுதிகளான சடையாண்டிபுரம், ராஜதாணிக்கோட்டை, பள்ளப்பட்டி, கன்னிமார்நகர், அம்மையநாயக்கனூர், ராமராஜபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்படுகின்றனவா என சோதனையிட்டனர். அப்போது அவர்கள், சடையாண்டிபுரம் மலைப்பகுதியில் தங்கியிருந்த மலைவாழ் மக்களிடம் மர்ம நபர்கள் நடமாட்டம் குறித்து கேட்டறிந்தனர். மாவட்டம் முழுவதும் கஞ்சா கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment