பூ மார்க்கெட் அருகே திண்டுக்கல் நகர் போக்குவரத்து காவல் துறையினர் தீவிர வாகன சோதனை
திண்டுக்கல் பேருந்து நிலையம் பூ மார்க்கெட் அருகே திண்டுக்கல் நகர் போக்குவரத்து காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திலீப் மற்றும் போக்குவரத்து காவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் வருபவர்களிடம் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் விதிகளை மீறிய இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment