திண்டுக்கல் சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் இன்று யோகா பயிற்சி அளிக்கப்பட்டது:
இன்று உலக யோகா தினத்தை முன்னிட்டு உலகப் புகழ் பெற்ற திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் திருக்கோயிலின் அறங்காவலர் குழு சார்பாக, திருக்கோயில் அர்ச்சகர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட அறங்காவலர் நியமனக் குழு தலைவர் சுப்ரமணி கலந்து கொண்டார். அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி அனைவருக்கும் யோகா பயிற்சி அளித்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment