உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு இருதரப்பினரும் சமரசமாக பேசி தீர்வு காணலாம் முதன்மை மாவட்ட நீதிபதி முத்துசாரதா அறிவிப்பு
திண்டுக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான முத்துசாரதா அவர்கள் கூறியதாவது, மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு சமரசமாக தீர்வு காணும் பொருட்டு, மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் வருகின்ற ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த சிறப்பு மக்கள்நீதிமன்றத்தில்உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள தங்கள் வழக்குகளுக்கு இருதரப்பினரும் சமரசமாக பேசி தீர்வு காணலாம்.
மேற்படி மக்கள் நீதிமன்றத்தின் முன்பு மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்கள் தங்கள் வழக்கறிஞர்கள் உடன் நேரடியாகவோ அல்லது இணையம் (online) வழியாகவோ பங்கு பெறலாம்.
இதுபற்றிய கூடுதல் விபரங்களுக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், திண்டுக்கல் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண் : 0451 - 2460107
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment