திண்டுக்கல் அருகே முகமூடி அணிந்து மாடு திருட வந்த 3 பேர் அரிவாள் முனையில் பெண்ணிடம் 3 பவுன் தங்கச் செயின் பறிப்பு
திண்டுக்கல்லை அடுத்த கூவனூத்து பகுதியைச் சேர்ந்த நல்லுசாமி, அவரது மனைவி ரங்கம்மாள் ஆகிய இருவரும் திண்டுக்கல் நத்தம் ரோடு பதனிக்கடை பிரிவு அருகே உள்ள தனது தோட்டத்தில் விவசாயம் செய்து ஆடு, மாடு மேய்த்து வந்தனர். இந்நிலையில் முகமூடி அணிந்து வந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க 3 பேர் அங்கிருந்த மாட்டை திருட முயன்றனர். கணவன்,மனைவி வரவே அப்பகுதியில் ஓடி சென்று பதுங்கி கொண்டனர். இதனை அடுத்து அந்த 3 பேர் அரிவாளை காட்டி மிரட்டி ரங்கம்மாள் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்து சென்றனர். இதுகுறித்து தாலுகா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment