திண்டுக்கல் அருகே மூதாட்டியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட வழக்கில் 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது
திண்டுக்கல் அருகே நொச்சியோடைபட்டி பகுதியில் கடந்த 9-ம் தேதி ரெங்கம்மாள்(50) என்ற பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்டு 2 1/2 பவுன் தங்க நகை பறித்து சென்றது தொடர்பாக தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் பிரபாகரன், பாலசுப்பிரமணியன் மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் வன்னியபாறைப்பட்டி பகுதியை சேர்ந்த தினேஷ்குமார்(24), ஜம்புளியம்பட்டி பகுதியை சேர்ந்த மோகன்ராஜ்(24) மற்றும் இரண்டு 17 வயது சிறுவர்கள் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment