பழனி அருகே மாமியாரை வெட்டி படுகொலை செய்த வழக்கில் மருமகன் கைது
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கலிக்கம்பட்டி, புது காலனியை சேர்ந்த ஜெயபாலன் மனைவி நிவேதா. இவர் குடும்ப பிரச்சனை காரணமாக கணவரை பிரிந்து தனது அம்மா சித்ரா வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதி பழனியில் உள்ள சித்ரா வீட்டிற்கு ஜெயபாலன் தகராறு செய்து மறைத்து வைத்திருந்த அரிவாளால் சித்ராவை வெட்டி கொலை செய்தார். மேலும் தடுக்க வந்த மனைவி நிவேதாவை அரிவாளால் வெட்டி கையை துண்டாக்கி தப்பி ஓடி விட்டார். இது தொடர்பாக பழனி நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதுகுறித்து மாவட்ட எஸ்பி பிரதீப் உத்தரவின் பேரில், பழனி டிஎஸ்பி தனஜெயன் மேற்பார்வையில் ஆய்வாளர்கள் மணிமாறன், தென்னரசன் ஆகியோர் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் விஜய், இளஞ்செழியன், ராமபாண்டி உள்ளிட்டோர் கொண்ட தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு மதுரையில் பதுங்கி இருந்த ஜெயபாலனை கைது செய்து அவரிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய அரிவாளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment