கோயிலில், கார்த்திகை விழா:
திண்டுக்கல்:திருமலைக்கேணியில், கார்த்திகை விழா சிறப்பு அலங்காரத்தில் திருமலைக்கேணி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி காட்சி அளித்தார்.
திண்டுக்கல் மாவட்டம், திருமலைக்கேணியில் சித்திரை மாத கார்த்திகை நாளையொட்டி மூலவர் சுப்ரமணிய சுவாமி, உற்சவர் முருகப்பெருமானுக்கும் பால்,பழம்,
பன்னீர், சந்தனம், ஜவ்வாது, விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 21 வகை அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், வெள்ளிக் கவச அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து, சுவாமி ஊர்வலம் நிகழ்ச்சியில் , சுற்றுவட்டாரங்களிலிருந்து, திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதைப்போலவே, நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் உள்பிரகாரத்தில் அமைந்துள்ள தண்டபாணி சன்னதியிலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
No comments:
Post a Comment