கொடைரோடு இரயில்வே காவல் நிலையம் அருகே மின்வாரிய ஊழியர் மர்ம மரணம் இரயில்வே போலீசார் விசாரணை
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு இரயில்வே காவல் நிலையம் அருகே 2 நாட்களாக துர்நாற்றம் வீசியது. போலீசார் சென்று பார்த்தபோது அழுகிய நிலையில் ஆண் உடல் கிடந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இவர் மதுரை முத்துப்பாண்டிபட்டி பகுதியை சேர்ந்த பாலன் என்றும் இவர் பழனி அருகே சத்திரப்பட்டியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் கணக்கு வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருவதும் இவருக்கு திருமணம் ஆகி கடந்த 6 மாதங்களாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருவதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் இது குறித்து இரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment