ஒட்டன்சத்திரம் அருகே தங்கச்சியம்மாபட்டியில் குளத்தில் நீரில் மூழ்கி பள்ளி மாணவன் பலி
திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் அருகே தங்கச்சியம்மா பட்டியில் உள்ள பாட்டி வீட்டிற்கு பாலன் மகன் அருண்குமார் வந்தார். தாய் முத்துலட்சுமியுடன் காப்பிலியபட்டி கிராமத்தில் உள்ள குளத்தில் குளிக்க சென்றனர். முத்து லட்சுமி துணி துவைத்துக் கொண்டிருந்த போது குளத்தில் குளித்து கொண்டிருந்த அருண்குமார் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி இறந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒட்டன்சத்திரம் தீயணைப்புத் துறையினர் அருண்குமாரின் உடலை மீட்டனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment