திண்டுக்கல் மாவட்டத்தில் அச்சு காகிதங்களை (செய்தித்தாள்கள்) பயன்படுத்தி உணவு பண்டங்களை பொட்டலமிட்டால் அபராதம் விதிக்கப்படும் - உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை
திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான டீக்கடைகளில் செய்தித்தாள்களைப் பயன்படுத்தி வடை, பயிறு வகைகள், பலகாரங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை பொட்டலமிட்டு வழங்கப்படுகிறது. சூடான எண்ணெய் பலகாரங்களை செய்தித்தாள்களில் வைக்கும் போது நச்சுத்தன்மை கொண்ட மை உணவுப் பொருள்களில் படிந்து விடுகிறது. இது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் டீக்கடை உரிமையாளர்கள் பலகார விற்பனையாளர்கள் பின்பற்ற மறுக்கின்றனர். இதே போல் இறைச்சி கடைகளில் கருப்பு வண்ண நெகிழிப்பை பயன்படுத்துவதும் ஆபத்து நிறைந்தது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உணவுப்பொருட்களை பொட்டல மிடுவதற்கு அச்சு காகிதங்கள், கருப்பு வண்ண நெகிழி பைகளை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment