திண்டுக்கலில் இன்று தானாக முன்வந்து இரத்த தானம் கொடுத்தவருக்கு உயிர் காத்த உத்தமர் விருது வழங்கப்பட்டது :
திண்டுக்கல் மாவட்டம் கன்னியம்மாள் என்ற பெண்ணுக்கு ( கணவர் இல்லை) இரத்த வகை AB +ஒருவர் உதவி தேவை திண்டுக்கல் அரசு மருத்துவமனை கர்பப்பை அறுவை சிகிச்சை அவசர உதவி தாண்டிகுடியில் இருந்து வந்து இருக்கிறார்கள் உதவி தேவை என்று ஒரு வாட்ஸ் அப் குரூப்பில் பதிவு செய்த உடன் தானே முன் வந்து தனது ரத்தம் கொடுத்து உதவி செய்த M.மூணாப்தீன் அவர்களை பாராட்டி உறவினர் முன் உயிர் காத்த உத்தமர் விருது வழங்கி அவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது மேலும் M.மூணாப்தீனின் இச்செயலை பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment