கொலையாளிகளை கைது செய்ய சாலை மறியல்:
திண்டுக்கல் மாவட்டம்,நிலக்கோட்டை அருகே, கூலித் தொழிலாளியை வெட்டி படுகொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி ,சாலை மறியல் நடந்தது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே கரியாம்பட்டி, நடுப்பட்டியில் நள்ளிரவு கூலித்தொழிலாளி ஆண்டார் என்பவரை, வெட்டி படுகொலை செய்த கொலை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி, உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நிலக்கோட்டை நான்கு ரோட்டில் சாலை மறியல் செய்தனர்.
இதனால், ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நிலக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும் காவல்துறையினர், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால், மதுரை - பெரியகுளம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
No comments:
Post a Comment