தடுப்புச் சுவர்கள் மீது அமர்ந்து புகை பிடிப்போர்,மது அருந்தி விட்டு பாட்டில்களை வீசி செல்வோருக்கு ஒட்டன்சத்திரம் வனசரக வனத்துறையினர் எச்சரிக்கை - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday, 7 May 2024

தடுப்புச் சுவர்கள் மீது அமர்ந்து புகை பிடிப்போர்,மது அருந்தி விட்டு பாட்டில்களை வீசி செல்வோருக்கு ஒட்டன்சத்திரம் வனசரக வனத்துறையினர் எச்சரிக்கை

 


தடுப்புச் சுவர்கள் மீது அமர்ந்து புகை பிடிப்போர்,மது அருந்தி விட்டு பாட்டில்களை வீசி செல்வோருக்கு ஒட்டன்சத்திரம் வனசரக வனத்துறையினர் எச்சரிக்கை 


திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வனச்சரக எல்லை பகுதிக்குள் செல்லும் ஒட்டன்சத்திரம் - பாச்சலுார் ரோடு 30 கிலோ மீட்டர் துாரம் உள்ளது. ரோட்டில் உள்ள தடுப்புச் சுவர்கள் மீது அமர்ந்து சில நபர்கள் புகைபிடித்தல் மற்றும் மது அருந்துகின்றனர். கோடை காலம் என்பதால் வனப் பகுதியில் தீ ஏற்படவும், மது அருந்திவிட்டு போடப்படும் பாட்டில்களால் வன உயிரினங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.


இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனச்சரகம் எச்சரித்துள்ளது. மீறுவோர் மீது 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, 


ரூ.1 லட்சம் அபராதம் என இரண்டும் சேர்ந்து விதிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad