இரண்டரை லட்சத்தில் ஒருவருக்கு மட்டும் தான் இருக்கும் அரிய வகை இரத்தம் சின்னாளபட்டியைச் சேர்ந்த சதாம் பாண்டியன் தானம் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday, 7 May 2024

இரண்டரை லட்சத்தில் ஒருவருக்கு மட்டும் தான் இருக்கும் அரிய வகை இரத்தம் சின்னாளபட்டியைச் சேர்ந்த சதாம் பாண்டியன் தானம்


 இரண்டரை லட்சத்தில் ஒருவருக்கு  மட்டும் தான் இருக்கும் அரிய வகை இரத்தம் சின்னாளபட்டியைச் சேர்ந்த சதாம் பாண்டியன் தானம் 


திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ராஜா என்ற நோயாளிக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சைக்காக அரிய வகை பாம்பே ஓ பாசிட்டிவ் என்ற அந்த  இரத்தம் தேவைப்பட்டது. இந்நிலையில் சின்னாளபட்டியைச் சேர்ந்த சதாம் பாண்டியன் என்பவருக்கு இந்த வகை இரத்தம் இருந்தது தெரியவந்தது. இரத்தவங்கி அலுவலர்கள் மூலம் அவரிடம் இருந்து இரத்தம் பெறும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.


இதையடுத்து இன்று காலை அரசு ஆஸ்பத்திரியில் சதாம் பாண்டியன் இரத்ததானம் செய்தார். இதன் மூலம் அறுவை சிகிச்சையில் இருந்த ராஜா என்பவரும், அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சி அடைந்தனர். இம்முயற்சியை திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி இரத்த வங்கி டாக்டர் அபிநயா மற்றும்  பாரத மாதா பவுண்டேஷன் நிறுவனர் ஆனந்தகுமார் ஆகியோர் மேற்கொண்டனர்.


இந்த பாம்பே ஓ வகை இரத்தம் இரண்டரை லட்சத்தில் ஒருவருக்கு  மட்டும் தான் இருக்கும் என்று திண்டுக்கல் அரசு  மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் தெரிவித்தனர். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad