முதலமைச்சர் மாநில இளைஞர் விருது பெற திண்டுக்கல் மாவட்டத்தில் தகுதியுள்ளவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி அறிவிப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது பெற தகுதியுள்ளவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
இந்த விருது 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ 1,00,000 ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும்.
விண்ணப்பங்களை இணையதளம் மூலம் 15.05.2024 அன்று மாலை 04.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவம் மற்றும் இதர விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான www.sdat.tn.gov.inல் பார்த்து அறிந்துகொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை, மாவட்ட விளையாட்டரங்கம், தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல் என்ற முகவரியில் நேரிலோ அல்லது 7401703504 என்ற கைபேசி வாயிலாகவோ தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment