தாடிக்கொம்பு ஆரம்ப சுகாதார நிலைய டிரைவர் மற்றும் பிசியோதெரபிஸிடம் கத்தி முனையில் செல்போன் பறிப்பு
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் டிரைவராக அழகர் மற்றும் பிசியோதெரபிஸ்ட் ஆக செல்வராணி ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் காரில் திண்டுக்கல் கொட்டபட்டி பகுதியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பணி முடித்துவிட்டு திரும்பி வரும்போது கொட்டபட்டி ஆலங்குளம் கரைப் பகுதியில் காரை நிறுத்திய போது அங்கு வந்த 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி அழகர் மற்றும் செல்வராணி ஆகிய இருவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment