திண்டுக்கல் மாவட்டத்தில், நாளை (மே 5)நடக்க உள்ள நீட் தேர்வை 6 மையங்களில் 3400 பேர் எழுதுகின்றனர்.
இந்தாண்டிற்கான நீட் தேர்வு நாளை நடக்க உள்ள நிலையில் இதற்கான, ஹால்டிக்கெட்கள் சில தினங்களுக்கு முன் வெளியானது. ஏராளமானோர் ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து, தேர்வுக்காக காத்திருக்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில், நத்தம் என்.பி.ஆர். பால்டெக்னிக் கல்லுாரி, என்.பி.ஆர்.,கலை அறிவியல் கல்லுாரி, என்.பி.ஆர்.,பொறியியல் கல்லுாரி, பழநி ரோடு பி.எஸ்.என்.ஏ. கல்லுாரி, திண்டுக்கல் பிரசித்தி வித்யோதயா பள்ளி, மதுரை ரோடு அனுக்கிரகா பள்ளி என, 6 மையங்களில் நடக்கும் . இதில் ,3400 மாணவர்கள் எழுதுகின்றனர்.
No comments:
Post a Comment