பகவதி அம்மன் கோயில் திருவிழா பக்தர்கள் காப்புக் கட்டி விரதம் தொடங்கினர்: - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday, 15 May 2024

பகவதி அம்மன் கோயில் திருவிழா பக்தர்கள் காப்புக் கட்டி விரதம் தொடங்கினர்:

  


பகவதி அம்மன் கோயில் திருவிழா பக்தர்கள் காப்புக் கட்டி விரதம் தொடங்கினர்:


திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அசோக்நகர் பகவதி அம்மன் கோயில் வைகாசி திருவிழா , கொடியேற்றத்துடன் தொடங்கியது.  கணபதி ஹோமம் நடந்ததை தொடர்ந்து, கன்னிமார் தீர்த்தம் எடுத்து சந்தனக் கருப்பு கோயிலை வந்தடைந்த பக்தர்களை மேளதாளம் முழங்க அதிர்வேட்டு, வர்ணக் குடை, தீவட்டி பரிவாரங்களுடன் கோயிலுக்கு அழைத்து சென்றனர். அங்கு ,பக்தர்கள் காப்புக் கட்டி விரதம் தொடங்கினர். இதையொட்டி ,10 நாட்கள் விழாவில் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, வரும் 21ந்தேதி பக்தர்கள் சந்தனக்குடம்,  பால்குடம், அக்கினிச்சட்டி எடுத்தல் நிகழ்ச்சியும், மாலையில் முளைப் பாரி ஊர்வலம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை, கோயில் காரணக்காரர்கள், விழாக்குழுவினர், அசோக்நகர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad