குஜிலியம்பாறை அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி
திண்டுக்கல் குஜிலியம்பாறையை அடுத்த பாளையம் அருகே திண்டுக்கல் வழியாக சென்ற ஏதோ ஒரு ரயிலில் இருந்து தவறி விழுந்து அடையாளம் தெரியாத வாலிபர் பலியானார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திண்டுக்கல் ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இறந்த வாலிபர் அணிந்திருந்த டி-ஷர்ட் ல் அகரம் பெயிண்ட் எனவும் அணிந்திருந்த பேண்ட் பாக்கெட்டில் ஈரோட்டில் இருந்து திருநெல்வேலி வரை பயணம் செய்வதற்கான முன்பதிவு இல்லாத டிக்கெட் வைத்துள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment