சீலப்பாடி அருகே சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து தாலுகா போலீசார் விசாரணை
திண்டுக்கல் சீலப்பாடி அருகே நான்கு வழி சாலையில் கடலை ஏற்றி வந்த சரக்கு வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் சிறு காயங்களுடன் டிரைவர் மற்றும் கிளீனர் உயிர் தப்பினர்.
அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெடுஞ்சாலைத்துறை போலீசார் மற்றும் தாலுகா போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.மேலும் இந்த சம்பவம் குறித்து தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment