திண்டுக்கல் அருகே விவசாயிகள் புகார். - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday, 25 May 2024

திண்டுக்கல் அருகே விவசாயிகள் புகார்.

 


திண்டுக்கல் அருகே விவசாயிகள் புகார்.


திண்டுக்கல் அருகே, அறுவடைக்கு தயாராக இருந்த மக்காச்சோளம் பயிரில்  கதிர் மட்டும் இருப்பதால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சி  அடைந்துள்ளனர்.


திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் மற்றும் காமாட்சிபுரம், கோட்டைப்பட்டி, கோட்டையூர், கரிசனம்பட்டி, சில்வார்பட்டி, புதுக்கோட்டை, தாதன்கோட்டை உட்பட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள்  அப்பகுதியில் உள்ள உரக்கடைகளில் இருந்து ஆந்திராவை  சேர்ந்த அட்வான்டா என்ற கம்பெனியைச் சேர்ந்த  மக்காச்சோளம் விதைகளை, விலைக்கு வாங்கி 700 ஏக்கரில் கடந்த மார்ச் மாதம்  நடவு செய்தனர். 


மக்காச்சோளத்திற்கு, மருந்து தெளித்தும் களை எடுத்தல்  என, ஏக்கருக்கு 40 ஆயிரம் முதல் 50,000 வரை விவசாயிகள் செலவு செய்து உள்ளனர். 


4 மாதம் கழித்து தற்பொழுது, அறுவடை மாதமாகும் இதனிடையே நன்கு வளர்ந்திருந்த மக்காச்சோளத்தை உறித்து பார்த்தால் உள்ளே மக்காச்சோளம் இல்லாமல் வெறும் கதிர் மட்டுமே உள்ளது.


இதுகுறித்து, திண்டுக்கல் மாவட்ட வேளாண்துறை அதிகாரிகளிடம்  புகார் அளித்தும், இதுவரை பாதிக்கப்பட்ட மக்காச்சோளத்தை பார்வையிட வரவில்லை என, விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.


 தமிழக அரசு உடனடியாக சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad