திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் திருடு போன இருசக்கர வாகனத்திற்கு அபராதம் - உரிமையாளர் அதிர்ச்சி:
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த உறவினரை கடந்த 10 ஆம் தேதி பார்க்க வந்த சாணார்பட்டி அருகே உள்ள எல்லப்பட்டியை சேர்ந்த சரவணன்(30) என்பவர் இருசக்கர வாகனம் திருடு போனது குறித்து திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து திண்டுக்கல் நகர் வடக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் சரவணனின் வாகனத்திற்கு தற்போது அபராதம் விதித்துள்ளதாகவும் அதற்கு பணம் செலுத்திய குறுந்தகவல் வாகன உரிமையாளருக்கு வந்துள்ளதால் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment