ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் பூசணிக்காய், சுரைக்காய் விலை உயர்வு வைகாசி மாதத்தில் சுபநிகழ்ச்சிகள் காரணமாக விலையேற்றம்
ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் பூசணிக்காய், சுரைக்காய் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.2க்கு விற்ற சுரைக்காய் ரூ.20க்கும், ரூ.8க்கு விற்ற பூசணி ரூ.14க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வைகாசி மாதத்தில் சுபநிகழ்ச்சிகள் அதிகமாக நடைபெறுவதால் காய்கறிகள் தேவை அதிகரித்துள்ளது. காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளதால் வரும் நாட்களில் விலை மேலும் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment