திண்டுக்கல் பெரிய பாலாஸ்பத்திரியின் அவல நிலை :
திண்டுக்கல் மாவட்டம் மாநகராட்சி பின்புறத்தில் பெரிய பாலாஸ்பத்திரி அமைந்துள்ளது இங்கு ஆண்கள் பெண்கள் என தனி தனி கழிவறைகள் உள்ளன.இதில் ஆண்கள் கழிவறையின் கதவு தனியாக பெயர்ந்து கிடக்கிறது, மேலும் இங்கு வரும் ஆண்கள் இந்தக் கழிவறையை பயன்படுத்தும் போது கதவை தூக்கிப் பிடித்துக் கொண்டே கழிவறையில் அமரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் தண்ணீரை உபயோகிக்கும் போது எப்படி கதவைப் பிடித்துக் கொண்டு சுத்தம் செய்ய முடியும் என இந்த கழிவறையை பயன்படுத்து நோயாளிகளும் கேள்வி எழுப்பி உள்ளனர்.மேலும் ஆண்கள் இந்த கழிவறையின் கதவை பிடித்துக் கொண்டே உள்ளே அமரும் போது யாரேனும் வெளியே கதவை இழுத்து விட்டால் என்ன ஆகும் என்ற மன உளைச்சல் ஏற்படுவதாக கூறுகின்றனர், ஆகையால் ஆண்கள் கழிவறையின் உடைந்த கதவை சரி செய்து தரும்படி இது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment