பழநி முருகன் கோயில் வைகாசி விசாக திருவிழா மே 16ம் தேதி துவங்குகிறது
திண்டுக்கல் மாவட்டம் பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று வைகாசி விசாக திருவிழா . 10 நாட்கள் நடைபெறும் இவ்விழா இந்த ஆண்டு வரும் மே 16ம் தேதி துவங்க உள்ளது. அன்றைய தினம் பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் காலை 9 மணி மேல் 9.45 மணிக்குள் மிதுன லக்னத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் மே 21ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் வள்ளி- தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் மே 22ம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment