தாமரைப்பாடி அருகே இன்னோவா கார் கவிழ்ந்து விபத்து கேரளாவை சேர்ந்த 4 பேர் காயம்
திண்டுக்கல்லை அடுத்த தாமரைப்பாடி அருகே கேரளாவில் இருந்து திருச்சி நோக்கி அதிவேகமாக சென்ற இன்னோவா கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இந்த காரில் பயணம் செய்த கேரளாவை சேர்ந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை நெடுஞ்சாலைத்துறை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வடமதுரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment