பழனியில் பல நாட்களாக நடக்க முடியாமல் ரோட்டில் ஆதரவற்ற நிலையில் இருந்த மூதாட்டியை பொதுமக்கள் உதவியுடன் மீட்ட காவல்துறையினர் மருத்துவமனையில் சேர்த்தனர்:
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் காந்தி மார்க்கெட் வேல் ரவுண்டானா அருகில் பல மாதங்களாக நடக்க இயலாது காலில் அடிபட்டு ஆதரவற்ற நிலையில் இருந்த வயதான லெட்சுமி என்கிற மூதாட்டியை பழனி நகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் மனோஜ் குமார் மற்றும் ஆதரவற்றோர் முதியோர் இல்ல பொறுப்பாளர் ரவிச்சந்திரன்,சமூக ஆர்வலர் முத்தமிழ் கவிஞர் வை.வைரபாரதி, பூக்கடை ஜாபர்,திருக்கோவில் ஹரி,பழனி நகர் போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர் ரமணி,தலைமை காவலர் லெட்சுமி, பழனி நகராட்சி அலுவலர் ஜோதி, மேற்பார்வையாளர்கள் சரவணகுமார், தியாகு, ஆகியோர் மீட்டு முதலுதவி செய்து 108 ஆம்புலன்ஸ் மூலம் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment