திண்டுக்கல் அருகே மகளை கர்ப்பிணியாக்கிய தந்தை போக்சோவில் கைது செய்யப்பட்டவர் மீது குண்டாஸ் பாய்ந்தது
திண்டுக்கல் சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த ராஜபெருமாள்(36) என்பவர் தனது 13 வயதுடைய மகளை பாலியல் தொந்தரவு செய்து 4 மாத கர்ப்பம் ஆக்கியது தொடர்பாக சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முருகேஸ்வரி தலைமையிலான போலீசார் ராஜபெருமாளை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் ராஜபெருமாளின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு S.P.பிரதீப் பரிந்துரையின் பேரில் கலெக்டர் பூங்கொடி அவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முருகேஸ்வரி தலைமையிலான போலீசார் ராஜப்பெருமாளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment