திண்டுக்கல்லில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 8 ஆண்டுகள் சிறை ரூ.25 ஆயிரம் அபராதம்
திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த ஆசிக் முகமது (எ) அல்ஆசிக் என்பவரை கடந்த 2023 ஆம் ஆண்டு நகர் மேற்கு காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் மாவட்ட எஸ்பி பிரதீப் அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் நகர் மேற்கு காவல் துறையினர் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆகியோரின் சீரிய முயற்சியால் இன்று போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி ஆசிக் முகமது (எ) அல்ஆசிக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment