திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 643 ரேஷன் கடைகளுக்கு விற்பனை முனைய இயந்திரங்கள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு:
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 643 நியாயவிலைக் கடைகளுக்கு 4ஜி இணையதள வசதியுடன் குடும்ப அட்டைதாரரின் கைவிரல்ரேகை பதிவு செய்யும் வசதியுடன் அல்லது கண் கருவிழியினை ஸ்கேன் செய்வதன் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் பெறும் புதிய வசதியுடன் கூடிய விற்பனை முனைய இயந்திரங்கள் வழங்கப்படவுள்ளது. புதிய இயந்திரத்தினை கையாளுவதற்காக நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது - மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி, தகவல்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்
No comments:
Post a Comment