ஒட்டன்சத்திரம் அருகே ஆம்னி வேனில் ரேஷன் அரிசி கடத்திய தொழிலாளி கைது 1000 கிலோ ரேஷன் அரிசி,வேன் பறிமுதல்
திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்.ஐ.,ராதா தலைமையிலான போலீசார் ஒட்டன்சத்திரம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக ஆம்னி வேலை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ரேஷன் அரிசி கடத்தி செல்வது தெரிய வந்தது இதனை அடுத்து போலீசார் ஆம்னி வேனில் ரேஷன் அரிசி கடத்தி வந்த ரமேஷ்(43) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 1000 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆம்னி வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment